தியாகி என்ற சொல்லுக்கு களங்கம் ஏற்படாத வகையில்
சுதந்திர போராட்ட தியாகி விருது வழங்கப்பட்டபோது
தியாகத்துக்கு விலை இல்லை,
பென்ஷன் வாங்கக்கூடாது என்று ஏற்கமறுத்த உத்தமர் தலைவர்
கவிஞர் கண்ணதாசன்
சேவையில் தொண்டராகி தியாகத்தால் தலைவராகி
பார்வையில் எளியராகி பண்பில் உயர்ந்தோராகி
நாவையும் காப்போராகி நாவண்மை மிக்கோராகி
தேவையை குறைத்த காந்தி சீடராம் எங்கள்ராகி
ராகி கையொப்பம் 1925 ல்
ராகி கையொப்பம் 1972 ல்
ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் புது.ராமச்சந்திரபுரம் கிராமத்தில்
1902ம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தார்.
நான்காம் வகுப்பு வரையில் பள்ளிகல்வி பின்
பல அறிஞர்களை அணுகி முயன்று கல்வி கற்று புலவரானார்.
இசைஞானமும், பக்தியும் மிகுந்தவர்

